உக்ரைனில் பாலியல் வன்முறை- ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன்

ரஷ்யா தனது தாக்குதலை உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் பாரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் என இந்த போரில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்படுவதாக ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டு உள்ளார். உக்ரைன் பெண்களை இலக்குவைத்து ரஷ்யா இதனை மேற்கொண்டுள்ளது எனவும், உக்ரைனில் மேற்கொள்ளப்படும் இந்த பாலியல் வன்முறை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதா? என்ற கேள்விக்கு, “எல்லா அறிகுறிகளும் உள்ளன” என்று அவர் கூறினார்.

தொடர்ந்தும் அவர் கூறியதாவது:
செப்டம்பரின் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையை குறிப்பிட்டு, இப்போர் தொடங்கியதில் இருந்து 100 ற்கும் மேற்பட்ட கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை வழக்குகளை ஐ.நா பதிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்