ஈஸ்டர் தாக்குதல் : ரிஷாட் பதியுதீன் விடுதலை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக்க தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று காலை
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.

தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்காக ரிஷாட் பதியுதீன் இந்த ஆண்டு ஏப்ரல்
மாதம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

2019 ஆண்டு இலங்கையில் பல இடங்களில் நடந்த குண்டு தாக்குதல்களில் 250
க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்