ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: விசாரணைகள் நிறைவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ
காரணமானவர்களைத் தண்டிக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 13
அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணைகளை நிறைவுசெய்த
உயர்நீதிமன்றம், எழுத்துமூல சமர்பிப்புகளை 3 வாரங்களுக்குள் தாக்கல்
செய்யுமாறு, இரு தரப்பினருக்கும் நேற்று (05) உத்தரவிட்டது.

அதற்கமைய, இந்த மனுக்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உரிய
காலப்பகுதிக்குள் வழங்கப்படவுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே,
எல்.டி.பி. தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.
நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய எழுவரடங்கிய நீதியரசர்கள் குழாம்
முன்னிலையில் இந்த விடயம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது, மனுதாரர் மற்றும் பிரதிவாதி தரப்பினர் முன்வைத்த வாதங்களை
நிறைவு செய்யப்பட்டதையடுத்து, மூன்று வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வ
சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்யுமாறு இரு தரப்புகளுக்கும் அமர்வு
உத்தரவிட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான இந்த மனுக்கள் தொடர்பில்
நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர முடியாது என உயர்நீதிமன்றம் கடந்த
செப்டெம்பர் 26ஆம் திகதி அறிவித்திருந்ததுடன், எவ்வாறாயினும், முன்னாள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்குகள் தொடரும் எனவும்
அறிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்