ஈரான் ராணுவ தளபதியின் உடல், ஈராக்கில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

பாக்தாத்: மேற்காசிய நாடான ஈராக் தலைநகர் பாக்தாத்தில், நேற்று முன்தினம் கொல்லப்பட்ட ஈரான் நாட்டு ராணுவ தளபதி குவாசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்திற்கு முன் நடந்த தாக்குதலில், ஐந்து பேர் பலியாகினர்.

மேற்காசிய நாடான ஈராக்குக்கு ஆதரவாக செயல்படும், ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின், குத்ஸ் படைப்பிரிவின் தளபதி குவாசிம் சுலைமானி, சிரியாவில் இருந்து விமானம் மூலம், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று முன்தினம் சென்றார்.அவரை வரவேற்க, ஈரான் ஆதரவு பெற்ற, ஈராக்கை சேர்ந்த ஹஷீத் அல்ஷாபி கிளர்ச்சியாளர் படையின் துணை தளபதி அபு மஹ்தி அல் மஹந்தி, விமான நிலையம் வந்தார். குண்டு வீச்சுஇருவரும், ஒரு காரில் ஏறி, புறப்பட தயாராகினர். அப்போது, அமெரிக்க ராணுவம், ஆளில்லா விமானம் மூலம், குண்டுகளை வீசியதில், அவர்கள் அமர்திருந்த காரும் மற்ற சில கார்களும் வெடித்து சிதறின.அத்துடன் தாக்குதலில், இருவரும் பலியாகினர். இருதரப்பை சேர்ந்த, 10 போராளிகளும் உயிரிழந்தனர்.இந்த சம்பவம், அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே, போர் மூளும் அபாயம் உருவாகி உள்ளது.இந்நிலையில், உயிரிழந்த ஈரான் ராணுவ தளபதியின் உடல், ஈராக்கில் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

முகநூலில் நாம்