ஈரானில் ஹிஜாப் விவகாரம் -400 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டணை

ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 400 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது. 3 மாதங்களாக நடைபெற்ற இந்த போராட்டம் ஈரானை உலுக்கியது.சொந்த மக்களின் இந்த போராட்டத்தை வெளிநாட்டு சதி என குற்றம் சாட்டிய ஈரான் இரும்பு கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது.இதில் 68 சிறுவர்கள் உட்பட சுமார் 490 போராட்டக்காரர்களும், 62 பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் போராட்டத்தில் கலவரம் செய்ததாக 18 ஆயிரத்து 200 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அப்படி கைது செய்யப்பட்டவர்கள் மீது பாதுகாப்பு படை வீரர்களை தாக்குதல், பொதுச் சொத்துக்களுக்கு தீ வைத்தல், நாசவேலை செயல்களில் ஈடுபடுதல் என பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் இரகசிய விசாரணை நடத்தி ஈரான் அரசு கடுமையான தண்டனை விதித்து வருகிறது. அந்த வகையில், போராட்டத்தின்போது பாதுகாப்பு படை வீரர்களை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் 2 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிலிடப்பட்டனர். இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தன.இந்த நிலையில், போராட்டத்தில் கலவரம் செய்ததாக கைது செய்யப்பட்டவர்களில் 400 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

160 பேருக்கு 10 ஆண்டுகளும், 80 பேருக்கு 2 முதல் 5 ஆண்டுகளும், மேலும் 160 பேருக்கு 2 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டடுள்ளதாக ஈரான் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்