ஈராக்கில் அமெரிக்க படையினர்  மீண்டும் தாக்குதல்!

வாஷிங்டன்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் புரட்சி படையைச் சேர்ந்த சுலைமானி, அபு மஹ்தி என்ற இரு தலைமை அதிகாரிகள்  கொல்லப்பட்டனர்.
அமெரிக்க அதிபர்  டிரம்ப்பின் உத்தரவுப்படி, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. 
இந்த தாக்குதல் குறித்து, இந்திய, சீன, ரஷ்ய வெளியுறவுத்துறை கவலை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றத்தை ஏற்படுத்துவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளன.  

போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா மேலும் 3500 வீரர்களை அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டகன் வட்டார தகவல் வெளியாகியுள்ளன. 
இந்நிலையில் இன்று 04.01.2020 அதிகாலை  காலை மீண்டும் வடக்கு பாக்தாத் பகுதியில் அமெரிக்க படைகள் வான் தாக்குதல் நடத்தியதாகவும், ராணுவ தளபதி ஒருவரை குறி வைத்து நடந்த இந்த தாக்குதலில் 6 பேர் பலியானதாக ஈராக் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

முகநூலில் நாம்