ஈட்டி எறிதல் வீரர்கள் நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங் அவசரமாக இந்தியா திரும்புகிறார்கள்

இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. 22 வயதான சோப்ரா தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியின்போது 87.86 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.

ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவதற்காக துருக்கியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. மனிதர்கள் தன்னிச்சையாகவே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனால் பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டு எல்லைகளை மூடி தயாராகி வருகின்றன. துருக்கி இன்றோடு தனது நாட்டு எல்லையை மூடப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் நாளையில் இருந்து துருக்கிக்கு செல்லவோ அல்லது அங்கிருந்து வரவோ முடியாது.

இந்நிலையில் நீரஜ் சோப்ரா பயிற்சியை நிறுத்திவிட்டு உடனடியாக இந்தியா திரும்புகிறார். இன்று அவர் இந்தியா வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மற்றொரு வீரரான ஷிவ்பால் சிங் தென்ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்புகிறார்.


முகநூலில் நாம்