ஈச்சிலம்பற்று கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறிய பொது மக்கள் மகிழ்ச்சி

ஈச்சிலம்பற்று கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறிய  பொது
மக்கள் மகிழ்ச்சி வைத்தியசாலைக்கு பாராட்டு

திருகோணமலை ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு
சிகிச்சை பெற்று குணமடைந்து வெளியேறிய  பொது மக்கள் வைத்தியசாலையின்
செயற்பாட்டிற்கு தங்களின் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து
வருகின்றனர். குறித்த                            வைத்தியசாலையில் தாம்
கவனிக்கப்பட்ட  மற்றும் பராமரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர்கள்
சமூக வலைத்தளங்களில் பாராட்டி பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்

திருகோணமலை ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் குணமடைந்த முதலாவது
தொகுதி கொரனா நோயாளர்கள் 28 பேர் நேற்றைய தினம்  புதன் கிழமை  வீடு
திரும்பினர். இவ்வாறு வீடு திரும்பியவர்களை வைத்தியசாலையின் செயற்பாடுகள்
தொடர்பில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நாட்டில் நிலவும் சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாண  சுகாதார
சேவைகள் பணிமனையினரால் மிகக் குறுகிய காலத்தில் அமைக்கப்பட்ட இந்த கொரனா
சிகிச்சை மையமானது தற்போது மிகவும் சிறந்தமுறையில் தனது சேவைகளை வழங்கி
வருவதாக அங்கிருந்து வெளியேறிய மக்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா
சிகிச்சை நிலையங்களில் பணியாற்றுவதற்கு  பலரும் தயக்கம் காட்டி வரும்
நிலையில் குறித்த வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்கள் உட்பட
அனைவரும்  நோயாளர்களை சிறந்த முறையில் கவனித்து வந்ததாகவும் அவர்கள்
தெரிவித்துள்ளனர்

மூதூர் தள வைத்தியசாலையின் மருத்துவத்துறை விசேட வைத்தியர் சிவகுமார்
தாமாக விரும்பி முன்வந்து இவ்வைத்தியசாலையினையும் பார்வையிட்டு வருகிறார்
 என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்