இவ்வாரம்  பிக்பொஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் நபர்!

பிக்பொஸ்  சீசன் – 4இல் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவர். அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி குறைவான வாக்குகளைப் பெற்றதால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்