
அபு தாபியில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான மும்முனை இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் இலங்கை 62 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
பங்களாதேஷுக்கு எதிரான தனது ஆரம்பப் போட்டியில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி வெற்றியீட்டிய இலங்கை, இந்தப் போட்டியில் கோட்டை விட்டு தோல்வி அடைந்தது.
துவிந்து ரணதுங்க, தினுர களுபஹன ஆகியோர் பந்துவீச்சிலும் சினேத் ஜயவர்தன, விஷ்வா ராஜபக்ஷ, ட்ரவீன் மெத்யூ ஆகியோர் துடுப்பாட்த்திலும் பிரகாசித்தபோதிலும் ஏனையவர்களின் பங்களிப்பு போதுமானதாக அமையவில்லை.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 298 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் ஹரூன் கான் 88 ஓட்டங்களையும் காலித் தனிவல் 45 ஓட்டங்களையும் கம்ரன் ஹோடக் 43 ஓட்டங்களையும் சொஹில் கான் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஹரூன் கான், காலித் தனிவல் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 135 ஓட்டங்களே ஆப்கானிஸ்தானுக்கு திருப்பு முனையாக அமைந்தது.
இலங்கை பந்துவீச்சில் துவிந்து ரணதுங்க 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தினுர கலுபஹன 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
299 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 40.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
துவிந்து ரணதுங்க, ட்ரவீன் மெத்யூ ஆகிய கடைநிலை வீரர்கள் 9ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 74 ஓட்டங்கள் காரணமாக இலங்கை கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.
துவிந்த ரணதுங்க 46 ஓட்டங்களையும் ட்ரவீன் மெத்யூ 34 ஓட்டங்களையும் விஷ்வா ராஜபக்ஷ 45 ஓட்டங்களையம் சினேத் ஜயவர்தன 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கையின் மொத்த எண்ணிக்கைக்கு 26 வைட்கள் உட்பட 34 உதிரிகள் பெரும் பங்களிப்பு செய்திருந்தது.
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் யமா அராப் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கலில் அஹ்மத் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இவ்வாறு மரணித்த சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் முதளைத் தாக்குதலில் உயிர் இழந்தவருக்கு நஸ்டஈடு கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.