இளையராஜா இசை கச்சேரி இப்படியாகிவிட்டதே, ரசிகர்கள் கவலை

இளையராஜா இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசையமைப்பாளர். இவர் இதுவரை சுமார் 1000க்கு அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இத்தகைய சாதனையை இந்தியாவில் வேறு எந்த இசையமைப்பாளர்களும் செய்வார்களா என்றால் கேள்விக்குறி தான்.

அந்த வகையில் இளையராஜா இன்னும் சில தினங்களில் மலேசியாவில் பிரமாண்ட இசை கச்சேரி ஒன்றை நடத்துவதாக இருந்தார்.

ஆனால், அதற்குள் கொரோனா வைரல் தாக்கம், அங்கு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பல இசைக்கலைஞர்கள் கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு வர மறுத்துவிட்டார்கள்.

இதன் காரணமாக இந்த இசை நிகழ்ச்சி தற்போது தள்ளிப்போகும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

முகநூலில் நாம்