இளையராஜாவை விமர்சித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த லக்ஷ்மி!

இசையமைப்பாளர் இளையராஜா குறித்த சர்ச்சைக்கு நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நீண்ட இடைவேளைக்கு பிறகு திரைப்படம் ஒன்றை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.

இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இளையராஜாவின் இசைக் கூடத்தில் அவருடன் இருக்கும் படத்தை நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பகிர்ந்திருந்தார். அதில் இளையராஜா நாற்காலியில் அமர்ந்திருக்க, அவருக்கு அருகில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தரையில் அமர்ந்துள்ளார்.

இதுகுறித்து ரசிகர் ஒருவர், தனது விருந்தாளிகள் அமர்வதற்கு கூட சேர் வாங்க முடியாத அளவுக்கு இளையராஜா ஏழையா? இதைப் பார்க்க மிக கவலையாக இருக்கிறது. இளையராஜா தான் செல்லும் இடமெல்லாம் மரியாதை எதிர்பார்க்கிறார். அவரும் மற்றவர்களுக்கு மரியாதை வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவருக்கு பதிலளிதத் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், வயதில் மூத்தவர், திறன் மிக்கவர். ராஜா சார் கடவுளுக்கு நிகரானவர். அவரது காலடியில் அமர்ந்திருப்பது ஆசிர்வாதமாக உணர்கிறேன். எப்பொழுது அவரது இடத்துக்கு சென்றாலும் மீண்டும் அதனை செய்வதில் மகிழ்ச்சியே. என் நண்பா, தரையில் அமர்வது ஆரோக்கியத்துக்கு நல்லது´´ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்