
தற்போது தேசிய பயிற்சிக் குழாமில் இணைக்கப்பட்டு விசேட பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் எடைதூக்கல் வீர, வீராங்கனைகள் 22 பேருக்கு ஒக்டோபர் 27 ஆம் திகதியன்று திறமைகாண் சோதனையொன்றை நடத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை எடைத்தூக்கல் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த திறமைகாண் சோதனைக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர்ஷிக்கா விஜய பாஸ்கர், சின்த்தன விதானகே, இந்திக்க திசாநாயக்க, சுதேஷ் பீரிஸ்,தினூஷா கோமஸ் உள்ளிட்ட 22 பேர் அழைக்கப்படவுள்ளனர்.
அதிவிசேட திறமை குழாமில் இடம்பெறுகின்ற 13 வீர, வீராங்களைகள் மற்றும் இம்முறை பொதுநலவாய எடைத்தூக்கல் போட்டியில் பங்குகொள்ளச்செய்ய எதிர்பார்த்துள்ள வீர, வீராங்கனைகள் என 22 பேரை இந்த திறமைகாண் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் பொதுநலவாய எடைத்தூக்கல் போட்டி ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த விசேட குழாம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான விசேட பயிற்சி நடவடிக்கைகளும் வழங்கப்பட்டும் வருகிறது.
எதிர்வரும் 27 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள திறமைக்காண் சோதனைக்கு, திலங்க விராஜ்,சத்துரங்க லக்மால், இந்திக்க திசாநாயக்க, சுதேஷ் பீரிஸ், ஷானக்க பீட்டர்ஸ், உஷான் சாருக்க, தினூஷா கோமஸ், சமரி மெண்டிஸ், சத்துரிக்கா பிரியன்த்தி, திமாலி ஹப்புத்தென்ன, சின்த்தன விதானகே, இசுரு குமார, சமன் அபேவிக்ரம, கமல் தேஷப்பிரிய, ருச்சிர ஜயசேன, ஸ்ரீமாலி சமரகோன், உமெய்ரா மொஹிதீன், நதீஷா ராஜபக்ச, ஆர்ஷிகா விஜயபாஸ்கர்,ஜீ.டி.குருகம,மனோஜ் மதுவன்த்த,சஞ்சனா வெதஆராச்சி ஆகியோரே அழைக்கப்படவுள்ளனர்.