இலங்கை விடயத்தில் விலகிப் போகும் ஜப்பான்

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, கடன் வழங்கிய
நாடுகளுடன், கடன் மறுசீரமைப்பு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது தவிர்க்க
முடியாத தேவையாக மாறியிருக்கின்ற நிலையில்  ஜப்பானைக் கொண்டு, சர்வதேச
கடன் வழங்குநர்களின் மாநாட்டைக் கூட்டுகின்ற முயற்சிகளில் அரசாங்கம்
ஈடுபட்டுள்ள போதும் யப்பான் அதிவிலிருந்து விலகி போவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தியாவையும் சீனாவையும் சமாளித்தால்  அடுத்த கட்ட நகர்வுகளை
முன்னெடுக்க கூடிய நிலை காணப்படுகிறது.
கொள்கை அளவில் ஜப்பான் இதற்குத் தயாராக இருப்பதாக கூறினாலும்,
அதிகாரபூர்வமாக அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றிய
போது, சர்வதேச கடன் வழங்குநர்களின் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து,
அதற்குத் தலைமை வகிக்க ஜப்பான் இணங்கியிருப்பதாக கூறியிருந்தார்.

ஆனால் அவர் அதனை அறிவித்த சில மணிநேரங்களிலேயே, டோக்கியோவில் இருந்து
மறுப்பு வெளியானது. இதுவரை அவ்வாறான எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை
என்று ஜப்பான் அறிவித்தது.

ஜப்பானின் இந்த அறிவிப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும்
இலங்கை விவகாரத்தில் ஜப்பான் அசட்டையாக இல்லை என்பதையே அது எடுத்துக்
காட்டியுள்ளது என்றும் அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்