
அரசியலமைப்பு ரீதியிலான தீர்வு திட்டத்தை நோக்கிய அரசாங்கத்துடனான
பேச்சுவார்த்தைகளில் ஆர்வத்துடன் கலந்துக்கொள்கிறோம்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் இதுவரையில் முழுமையாக
நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறைந்தது அந்த ஒப்பந்தத்தில் உள்ள
விடயங்களையேனும் முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதுடன், இதற்காக
இந்தியாவின் ஒத்துழைப்பினையும் கோருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி
எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சென்னை வர்த்தக மையத்தில் இடம்பெற்ற 9ஆம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்
எம்.ஏ.சுமந்திரன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுடன்
இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஏ.என்.ஐ. செய்தி சேவைக்கு கருத்து
வெளியிடும் போதே இதனைத் தெரிவித்தார்.