இலங்கை – ரஷ்யாவுக்கு இடையில் நேரடி விமான சேவைகள்

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நேரடி விமான பயணங்கள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தகவலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய வெளிவிகார அமைச்சர் சேர்ஜி லெவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொருளாதாதர அபிவிருத்தி, சர்வதேச தொடர்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் ரஷ்ய அமைச்சர்கள் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

இதன்போது இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் விரைவில் விமான பயணங்கள் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரஷ்ய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விமான சேவை தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவுதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்