இலங்கை மல்யுத்த அணி தலைமைப் பயிற்றுநர் நாட்டைவிட்டு வெளியேற்றம்

பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ள இலங்கை மல்யுத்த அணியின் தலைமைப் பயிற்றுநர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதால் மல்யுத்த வீரர்கள் போட்டிகளில் பங்குபற்றவதில் சிக்கல் ஏற்படும் எனவும் சில சந்தர்ப்பங்களில் போட்டியில் பங்குபற்ற முடியாமல் போகும் எனவும் மல்யுத்த அணியின் தற்காலிக பயிற்றுநராக செயற்படும் என்.கே.ஜே. பியரட்ன தெரவித்தார்.

பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ள இலங்கை வீர, வீராங்கனைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடிபோதே இந்தப் பிரச்சினையை பியரட்ன வெளிப்படுத்தினார்.

இலங்கை மல்யுத்த வீரர்கள் இருவர் ஏக காலத்தில் போட்டியிட நேரிட்டால் இரண்டு பயிற்றுநர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு போட்டியாளருக்கு பயிற்றுநர் இல்லாமல் போனால் அந்தப் போட்டியாளருக்கு பங்குபற்ற அனுமதி மறுக்கப்படும். அது முழு அணிக்கும் பாதிப்பை தோற்றுவிக்கும்’ என பியரத்ன சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

மல்யுத்த அணியின் தலைமைப் பயிற்றுநர் வை.ஆர்.சி. பெர்னாண்டோ இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக கடைசி நேரத்தில் முறையிடுவதால் எம்மால் உதவி செய்ய முடியாதுள்ளதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன்னரே சம்மேளனம் எமக்கு அறிவித்திருந்தால் உரிய நடவடிக்கை எடுத்திருக்கலாம்’ என்றார்.

இந் நிலையில் பயிற்றுநர் ஒருவரை அனுப்புவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்