
கிரிப்டோ கரன்சிகள் உட்பட டிஜிட்டல் நாணயத்தை (மெய்நிகர் பணம்) பயன்படுத்துவது இலங்கையில் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதோடு பொதுமக்கள் இணையம் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படும் பல்வேறு வகையான மெய்நிகர் நாணயத் திட்டங்களுக்கு இரையாகிவிட வேண்டாம் என்றும் மத்திய வங்கி பொதுமக்களை எச்சரிக்கிறது.
மெய்நிகர் நாணயங்கள் என்பது கட்டுப்படுத்தப்படாத, மின்னணு முறையில் மாற்றக்கூடிய டிஜிட்டல் நாணயங்கள் சில தரப்பினரால் தனிப்பட்ட முறையில் வெளியிடப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான மெய்நிகர் நாணயத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாட்டிலுள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் அங்கீகாரம் வழங்கவில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், கணினிகள் (மைனிங் செயல்பாடுகள்) மூலம் மெய்நிகர் பணத்தை உருவாக்குவதற்கு அல்லது மெய்நிகர் பணத்தை மாற்றுவதற்கு ஆன்லைன் சந்தையை இயக்கவோ அல்லது அங்கீகரிக்கவோ அங்கீகரிக்கப்படவில்லை என்றும் மத்திய வங்கி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.