
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு சதொச நிறுவனத்தின் ஊடாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிக் மீ (pickMe) நிவனத்துடன் இணைந்து இந்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் நுசாத் எம்.பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் கொழும்பை மையமாக கொண்டு நேற்று ஆரம்பிக்கப்பட்டதாகவும் இன்று முதல் இதனை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் செயற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் கொழும்பு மெனிங் சந்தையை தொடர்ந்து திறக்கவுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.