இலங்கை பாஸ்போர்ட் உடையவர்களுக்கு கட்டுநாயக்காவில் புதிய நடைமுறை

இலங்கையின் குடிவரவுத் துறை, இலங்கை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தனித்தனி வரிசைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பல காலமாக இலங்கை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை பாதை வழங்கவேண்டும் என பலரும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இது 100 சதவிகிதம் செயலில் இருக்கக்கூடிய ஒரு திட்டம் அல்ல என்றும் , ஏனென்றால் விமானங்களில் பயணிகளின் வருகையை பொறுத்து, முன்னுரிமை பாதை நெரிசலை மோசமாக்கும் என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதற்கு முன்னதாக, இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ பாஸ்போர்ட்டுகளுக்கு முன்னுரிமை பாதை மட்டுமே நடைமுறையில் இருந்து வந்தது. இவ்வாறான நிலையில் இலங்கையின் குடிவரவுத் துறை இலங்கை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு தனித்தனி வரிசைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

முகநூலில் நாம்