இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு பிரிட்டன் வரவேற்பு

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான வாக்கெடுப்பின்
முடிவுகளை நாங்கள் வரவேற்கின்றோம் இந்த தீர்மானம் மனிதஉரிமைகள்
பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும் என பிரிட்டனின்
வெளிநாடு பொதுநலவாயம் அபிவிருத்திக்கான அலுவலகம் ஆகியவற்றிற்கான இராஜாங்க
அமைச்சர் தாரிக் அகமட் பிரபு தெரிவித்துள்ளார்.

நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானம் இலங்கை தொடர்பாக அறிக்கையிடுவதற்கான
எதிர்கால பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளிற்கு பயன்படுத்துவதற்காக
ஆதாரங்களை சேகரித்து பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமை
ஆணையாளரின் அலுவலகத்தின் ஆணையை புதுப்பித்துள்ளது எனவும் தெரிவித்துள்ள
தாரிக் அஹமட் பிரபு இது உண்மையை நிலைநாட்டுவதற்கும் நிரந்தர நீதி மற்றும்
நல்லிணக்கத்தை அடைவதற்கும் நாட்டில் மனித உரிமைகளை ஏற்படுத்துவதற்கும்
அவசியமானதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை
முன்னெடுத்து செல்ல உதவுவதற்காக புதிய அரசாங்கத்துடன் இணைந்து
செயற்படுவதற்கான எமது கூட்டு மற்றும் புதுப்பிக்கப்பட்ட திறனில் எங்கள்
கவனம் இனிமேல் திரும்பவேண்டும்,எனவும் தெரிவித்துள்ள அவர் ஐக்கிய நாடுகள்
மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகளின் ஆதரவை கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்