
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை திட்டமிட்டப்படி நடத்துவதற்கு இரு நாட்டு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதி குறித்த போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த போட்டிகள் தென்னாபிரிக்காவின் செஞ்சுரியன் மற்றும் ஜோகன்னஸ்பேர்க் மைதானங்களில் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, கடந்த மார்ச் மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஜனவரியில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக இங்கிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.