இலங்கை தயாரிபின்  கொரோனா தடுப்பு மருந்து இன்று ஆராய்வு

இலங்கையில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து தொடர்பில் இன்று (புதன்கிழமை) விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவரால் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து  தொடர்பாகவே இதன்போது ஆராயப்படவுள்ளது.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ஜனாதிபதி இது தொடர்பாக விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 50 தொற்றாளர்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்