
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில் துடுப்பாட்டவீரர் பத்தும் நிஸங்க இடம்பெற்றுள்ளார்.
இலங்கை இறுதியாக விளையாடிய டெஸ்ட் தொடரான இங்கிலாந்துக்கெதிரான தொடருக்கான இலங்கைக் குழாமில் இடம்பெற்றிருந்த குஷல் பெரேரா, டில்ருவான் பெரேரா, லக்ஷன் சந்தகான் ஆகியோர் குறித்த குழாமில் இடம்பெறவில்லை.
இந்நிலையில், காயங்களிலிருந்து அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, சகலதுறைவீரர் தனஞ்சய டி சில்வா ஆகியோர் குழாமுக்குத் திரும்பியுள்ளனர்.
திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), தசுன் ஷானக, பத்தும் நிஸங்க, ஒஷத பெர்ணான்டோ, லஹிரு திரிமான்ன, தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ், நிரோஷன் டிக்வெல்ல, றொஷேன் சில்வா, தனஞ்சய டி சில்வா, வனிடு ஹஸரங்க, ரமேஷ் மென்டிஸ், விஷ்வ பெர்ணான்டோ, சுரங்க லக்மால், அசித பெர்ணான்டோ, துஷ்மந்த சமீர, லசித் எம்புல்தெனிய.