
இலங்கை ஜனாதிபதி மாலைதீவுக்கு சென்றுள்ள நிலையில் அவருடைய வருகை தொடர்பாக தற்போதைக்கு எவ்விதமான நிலைப்பாடுகளையும் வெளியிட முடியாது என்று மாலைதீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தற்போது வரையில் இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் இருந்து எவ்விதமான உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் தமக்குக் கிடைக்கவில்லை என மாலைதீவு வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ஜனாதிபதி கோட்டாவின் மாலைதீவு வருகை சம்பந்தமான எமது அரசாங்கம் எந்த நிலைப்பாட்டையும் தற்போது வரையில் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்