
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும், ஐக்கிய நாடுகளின்
அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) உதவி நிர்வாகியும், ஆசிய
மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான UNDP பிராந்திய பணியகத்தின்
பணிப்பாளருமான கன்னி விக்னராஜா, சமூக அரசியல் அபிவிருத்திக்கான
இலங்கையின் திட்டங்கள் குறித்து பாராட்டு தெரிவித்தார்.
இலங்கை சரியான திசையில் மீள்வதை நாங்கள் பாராட்டுகிறோம், என்று தெரிவித்த
அவர், UNDP இன் தொடர்ச்சியான உதவியையும் உறுதிப்படுத்தினார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று அலரிமாளிகையில் சந்தித்த போதே அவர்
இதனைத் தெரிவித்தார்.
இதன் போது கன்னி விக்னராஜா அண்மையில் உதவிச் செயலாளர் நாயகமாக பதவி
உயர்வுபெற்றமைக்காக பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்