
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு அவுஸ்திரேலியநீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.இலங்கை கிரிக்கெட் சங்கம் மற்றும் அரசாங்கம் என்பன 150,000 அமெரிக்கடொலர் பிணைத்தொகை வழங்க முன்வந்ததையடுத்து அவர் பிணையில்விடுவிக்கப்பட்டுள்ளார்.அத்துடன், தினமும் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும்,இரவு 9 மணி மற்றும் காலை 6 மணி வரை வெளியில் செல்ல தடை உள்ளிட்ட பிணைநிபந்தனைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.மேலும், டிண்டர் உள்ளிட்ட டேட்டிங் செயலிகளை அணுகுவதற்கு அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உள்ளிட்டகுற்றச்சாட்டுகளில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கஅவுஸ்திரேலிய பொலிஸாரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.