இலங்கை கிரிக்கெட்டுக்கு எதிராக தேசிய விளையாட்டு பேரவை விசாரணை!

இலங்கையின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய விளையாட்டுப் பேரவை ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு மாற்றப்பட்டதற்கான காரணத்தை தேசிய விளையாட்டுப் பேரவை இதன்மூலம் ஆராயவுள்ளது.

இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து விளையாட்டுத்துறை அமைச்சரிடம் அறிக்கை ஒப்படைக்கப்படும் என்று தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2022 ஆசியக் கிண்ணத்தை நடத்தும் வாய்ப்பை நழுவவிட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்பளை இலங்கை நடத்தியுள்ள நிலையில், ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான வழியை இலங்கை கிரிக்கெட் கண்டுபிடித்திருக்க வேண்டும் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்துவதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏன் தோல்வியடைந்தது என்று கேள்வி எழுப்பிய விளையாட்டுத்துறை அமைச்சர், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்கு கிரிக்கெட் தொடரின் மூலம் மிகவும் தேவையான நிதியுதவியை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்திருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்