
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை நீக்க சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
FIFA இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அங்கத்துவத்தை 2023 ஜனவரி மாதம் 21ஆம் திகதியன்று இடைநிறுத்தியது.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை விளையாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை விளையாட்டு அமைச்சின் சிறந்த பதிலை கருத்திற்கொண்டு நேற்று (27) இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 29.09.2023 ஆம் திகதி நடைபெறும் என இந்நாட்டு விளையாட்டு அதிகாரிகள் உறுதியளித்துள்ள நிலையில்,
அதுவரை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தொடர்பில் அவதானித்து வருவதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் விடுத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.