இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மூலம் ‘சுரக்‌ஷா ‘ காப்புறுதி

நாட்டிலுள்ள சகல பாடசாலை மாணவர்களினதும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட சுர க்‌ஷா மாணவர் காப்புறுதி திட்டத்தின் கீழ், மே மாதம் 31 ஆம் திகதி முதல், பயனாளர்களுக்கான கொடுப்பனவு, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மூலம் வழங்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, காப்புறுதியை பெற்றுக்கொள்ளும் பயனாளர்கள் சரியாக பூ​ர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேவையான ஆவணங்களுடன், இலங்கை காப்புறுதி கூட்டுத்தான பிரதான காரியாலயத்திலோ அல்லது நாட்டிலுள்ள கிளை காரியாலயங்களி​லோ நேரடியாக அல்லது தபால் மூலமாக கையளிக்கலாம்.

முகநூலில் நாம்