
இலங்கை கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்விற்கு முதலீட்டாளர்களை
ஈர்ப்பதற்கு தேவையான சட்ட விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு
வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு
தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை கடலில் கனிம வள ஆய்விற்கான முதலீட்டு நடவடிக்கைகளை
பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பிக்கவுள்ளது.
பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன.
கனிம வளங்களை ஆய்வு செய்தல், முதலீடு செய்தல் தொடர்பான உத்தரவுகள்
அடங்கிய விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வு மற்றும் முதலீடு செய்வதற்கான கோரிக்கை, வேலைத்திட்ட
முன்மொழிவு, அதனை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படும் கால எல்லை ஆகியவை
பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திடம்
சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.