
இலங்கை கடற்பரப்பில் உக்ரைன் மாலுமிகள் இருவர் உயிரிழந்துள்ளமை குறித்து
விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
எகிப்திலிருந்து இந்தியா சென்றுகொண்டிருந்த சரக்குகப்பலில் பணியாற்றிய
இரு உக்ரைன் மாலுமிகளே உயிரிழந்துள்ளனர்.
குறிப்பிட்ட கப்பல் தற்போது காலி கடற்பரப்பில் தரித்து நிற்பதாகவும்
உயிரிழப்பு குறித்து காலிநீதவானிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
41 மற்றும் 53 வயதான உக்ரைன் மாலுமிகளே உயிரிழந்துள்ளனர் உடல்களை காலி
கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள்
இடம்பெறுகின்றன.