இலங்கை உணவகங்களில் உணவு உட்கொள்பவர்களுக்கு எச்சரிக்கை!!

அண்மைக்காலமாக இலங்கையின் சந்தையில் உணவுப்பொருடகள் சிலவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்களில் மஞ்சள் தூளுக்கு பதிலாக டை பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்படும் மோ சடி நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மஞ்சள் தூளுக்கு பதிலான டை பயன்படுத்துவதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது மாத்திரமின்றி மக்கள் பயன்படுத்தும் தேயிலை தூள் மற்றும் மசாலா தூளின் தரம் தொடர்பில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவற்றிற்கு டை பயன்படுத்தி சந்தையில் விற்பனை செய்யும் மோசடி தகவல்களை வெளிப்படுத்துவதற்கு தாம் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான மோ சடிகள் குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முகநூலில் நாம்