இலங்கை – இந்தியா டி20 போட்டி மழையினால் கைவிடல்!

சுற்றுலா இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

எவ்வாறாயினும், போட்டி இடம்பெறவிருந்த குவாஹத்தி மைதான பகுதியில் மழை பெய்து வந்ததால் போட்டி ஆரம்பமாக தாமதமாகியது.

இந்நிலையில், மழை தொடர்ச்சியாக பெய்து வந்த காரணத்தால் போட்டியை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

முகநூலில் நாம்