இலங்கை அணி 222 ஓட்டங்கள் குவிப்பு: பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது பாகிஸ்தான் அணி!

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸிற்காக 222 ஓட்டங்களை பெற்றுள்ளது.

காலி சர்வதேச மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தினேஷ் சந்திமால் 76 ஓட்டங்களையும் மகேஷ் தீக்ஷன 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஷாயின் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும் ஹசன் அலி மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நசிம் ஷா மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து தற்போது தனது முதல் இன்னிங்ஸிற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்