
அமெரிக்காவின் நிதியுதவியுடனான “தொழில் ஆலோசனை பேருந்து” (Career Bus) இன்று தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
தொழில் பயிற்சி அதிகாரசபை மற்றும் தனியார் துறையினரின் பங்கான்மையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரூந்தானது, தேவேந்திரமுனையில் அதனது பயணத்தை ஆரம்பித்ததுடன், கிழக்கு, தெற்கு, வடக்கு, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் 30 இற்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் நிறுத்தப்படவுள்ளது.
அது தமது பயணத்தை 2020 மே மாதம் முதலாம் திகதி பருத்தித்துறையில் நிறைவுசெய்யும். இந்த பேருந்து இலங்கை முழுவதும் பயணிப்பதன் மூலம், தொழில் வழிகாட்டல் நிபுணர்களை அணுகுவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளைக் கொண்ட கிராமிய இளைஞர்களுக்கு அது தொழில்முறை வேலைவாய்ப்பு ஆலோசனை சேவைகளை எடுத்துவரும் எனவும் கூறப்படுகின்றது.