இலங்கையை ஊதி தள்ளிய இந்தியா..! வருத்தத்தில் மலிங்கா கூறிய உருக வைக்கும் வார்த்தைகள்

புனேவில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியின் போது சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பதை இலங்கை வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இலங்கை அணித்தலைவர் லசித் மலிங்கா கூறினார்.

புனேயில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2-0 என்ற வெற்றி கணக்கில் இந்தியா டி-20 தொடரை கைப்பற்றியது

போட்டிக்கு பின் பேட்டியளித்த இலங்கை அணித்தலைவர் மலிங்கா கூறியதாவது, இந்த மாதிரியான சூழ்நிலைகளில் பந்தை சிறப்பாக கட்டுப்படுத்த வேண்டும்.

கடைசி மூன்று ஓவர்களில் இந்திய சிறப்பாக விளையாடியது. ஆனால் இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்டகாரர்கள் விரைவாக வெளியேறினர்.

அதே நேரத்தில் தனஞ்சயா மற்றும் மேத்யூஸ் இங்கே பேட்டிங் செய்வது எவ்வளவு எளிது என்பதை எங்களுக்குக் காட்டினர். இந்த சூழ்நிலைகளை எவ்வாறு சிறப்பாக கையாள்வது என்பதை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மலிங்கா கூறினார்.

ஹசரங்கா மற்றும் சண்டகன் ஆகியோரின் சிறப்பான செயல்பாடு 2020 உலக கோப்பை டி-20-யில் விளையாட தகுதியானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.

இவர்களை போன்ற திறமையான வீரர்களை இலங்கை அணி கொண்டுள்ளது, அவர்களை ஆதரித்து அதிகபட்சமாக உலகக் கோப்பையில் விளையாட வைக்க வேண்டும்.

உலகில் உள்ள அனைத்து அணிகளும் ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்துகின்றன, மேலும், இலங்கையில் ஹசரங்கா மற்றும் சண்டகன் ஆகியோர் சிறந்த பந்து வீச்சாளர்களாக உள்ளனர். இரண்டு பந்துவீச்சாளர்களும் உலக கோப்பை டி-20-யில் விளையாட நாங்கள் எதிர் பார்க்கிறோம் என்று மலிங்கா கூறினார்.

முகநூலில் நாம்