
பங்களாதேஷிற்கும் தெற்காசிய நாட்டிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை
மேம்படுத்துவதற்கு இலங்கையுடன் நேரடி கப்பல் இணைப்பை ஏற்படுத்த
வேண்டியதன் அவசியத்தை பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் A.K. அப்துல்
மொமென் (A.K.Abdul Momen) வலியுறுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை
முன்கூட்டியே முடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதையும்
அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் 22வது அமைச்சர்கள் கூட்டம்
பங்களாதேஷில் இடம்பெறும் நிலையில், அங்கு விஜயம் செய்துள்ள பிரதமர் அலி
சப்ரியுடன் பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சர் ஒரு சந்திப்பை நடத்தியபோது
இந்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சு
தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளின் பரந்த அளவைப் பற்றி
விவாதித்த இரு தலைவர்களும் இரு நாட்டு மக்களின் மேம்பாட்டிற்காகவும்
பிராந்தியத்தின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காகவும் நெருக்கமாக
இணைந்து பணியாற்ற நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும் இதன்போது, பங்களாதேஷில் இருந்து மலிவு விலையில் விவசாய பொருட்கள்
மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதை அதிகரிக்குமாறு இலங்கையை
மொமன் வலியுறுத்தியுள்ளார்.
பங்களாதேஷுடன் நெருங்கிய பங்காளியாக செயற்படுவதற்கு தமது நாடு ஆர்வமாக
உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.