இலங்கையில் 53,000 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் உறுதி

உறுதியளிக்கப்பட்டுள்ளவாறு சுமார் 53,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நடவடிக்கை மார்ச் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகள் மற்றும் அதற்கு சமமான உயர் தேசிய டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளவாறு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க தேவையான அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுள்ளன.

பல்வேறு அரச நிறுவனங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபட்டுள்ள 180 நாட்களை பூர்த்தி செய்துள்ளவர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலில் நிரந்தரமாக்குதல் பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. குறித்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி தகைமைகளை பூர்த்தி செய்துள்ள அனைவரையும் நிரந்தர சேவையில் உள்வாங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது எனவும் மேலும் அறிய முடிகின்றது.

முகநூலில் நாம்