இலங்கையில் 1,880 ஆக அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை இன்று காலை 08மணி வரை 1880 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 2 பேர் இனங்காணப்பட்டுள்ளார்.

அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவர் கடற்படை வீரர் எனவும் மற்றையவர் கட்டாரில் இருந்து வந்து தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டள்ளவர் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1196 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் தற்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 673 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும்நிலையில், 57 பேர் தொடர்ந்தும் வைத்தியகண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

முகநூலில் நாம்