இலங்கையில் 18 வயது யுவதி செய்த பாதக செயல்!

இரத்தினபுரி காங்கம, கொஸ்கல பிரதேசத்தில் 18 வயதான யுவதியொருவர் குழுந்தை பிரசவித்து, குழந்தையை நிலத்தில் புதைத்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும், துரிதமாக செயற்பட்டு குழந்தை தோண்டியெடுக்கப்பட்ட நிலையில் தற்போது வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த 18 வயதான யுவதி குழந்தை பிரசவிக்க இருந்த நிலையில், வைத்தியசாலைக்கு செல்லாமல் நேற்று முன்தினம் காலை வீட்டிலேயே குழந்தையை பிரவசித்துள்ளார்.

இதனையடுத்து தொப்புள்கொடியைக் கத்தியொன்றினால் வெட்டிய அப் பெண், பிறந்த சிசுவை வீட்டுக்கு அருகில் அரை அடி குழியொன்றைத் தோண்டிப் புதைத்துள்ளார். இந்நிலையில் குழந்தை புதைக்கப்படுவதை அவதானித்த அயலவர்கள் துரிதமாக செயற்பட்டு சிசுவை மீட்டெடுத்ததுடன், பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், குறித்த யுவதியை கைது செய்து வைத்தியசாலையில் அனுமதித்ததோடு, சிசுவையும் வைத்தியசாலையில் அனுமதித்தனர். தற்பொழுது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உடல்நலம் தேறி வருகின்ற நிலையில் யுவதியிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகநூலில் நாம்