இலங்கையில் வறுமையான குடும்பங்களுக்கு 10,000 கொடுக்க வேண்டும்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலின்றி இருக்கும் வறுமையான குடும்பங்களுக்கு அரசாங்கம் 10ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களில் ஒருவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இதை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸால் இலங்கை சனத்தொகையில் பாதியளவிலானோர் நிதி முடக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.

அவசரமாக ஊரடங்கு அமுல்செய்யப்பட்டமையால் பல குடும்பங்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியவில்லை.

சில குடும்பங்களின் உறுப்பினர்கள் தமது தங்க நகைகளை அடகுவைத்து பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக அவர்கள் தமது தொழில்களை செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார்

முகநூலில் நாம்