இலங்கையில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு

இலங்கையில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட இரு ஆண்களும் பெண் ஒருவரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த ஏனைய மூவரும் 60 வயதுக்கு மேற்பட்ட  பெண்களாவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்