இலங்கையில் முதலாவது ட்ரோன் படையணி!

இலங்கை இராணுவத்தில்   ட்ரோன் படையணி ஒன்று ஆரம்பிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நிலத்தை கண்காணிக்கும் விடயத்தில், இந்த ட்ரோன் படையணியின் ஒத்துழைப்பை இராணுவத்தினர் பெற்றுக்கொள்வர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை நிறைவு செய்த நாடு என்ற ரீதியில்,நாட்டில் ஏற்படும் அனர்த்த நிலைமைகளைக் கண்காணிப்பதற்காகவும் எதிர்காலத்தில் தேசத்தைப் பாதுகாப்பதற்காகவும் இந்த ட்ரோன் படையணியின் ஒத்துழைப்பை பெற எதிர்பார்த்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராணுவத்தினரை சகல விடயங்களிலும் பலப்படுத்துவது அவசியம் என்பதுடன், அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்