இலங்கையில் மற்றுமொரு விசேட வர்த்தமானி

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளதாக விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

1982 ஆண்டு இலக்கம் 10யின் கீழான பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்துடன் வாசிக்கப்பட வேண்டிய 1979 ஆண்டு இலக்கம் 48யின் கீழ் பயங்கரவாதத்தை தடுக்கும்  ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 15ஆவது சரத்தின் கீழ் தங்காலை பழைய சிறைச்சாலையை பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைக்கும் இடமாக பயன்படுத்தப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன இதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்