இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள ஈக்கள்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெப்பமான வானிலையால் ஈக்களின் பெருக்கம் திடீரென அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, வீதியோரங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் இருந்து உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யும் போது, மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் ஈக்களின் பெருக்கத்தால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

முகநூலில் நாம்