
உள்ளூர் சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 80,000 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பங்கு சந்தை கொடுக்கல் வாங்கல்கள் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் தங்கத்திற்கான கோரிக்கை அதிகரித்துள்ளது.
கோரிக்கைக்கு தகுந்த சேவையை வழங்க முடியாமையினால் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக நகை விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.