இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும் பாதிக்கப்படலாம் – எச்சரிக்கின்றது யுனிசெவ்

இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும்மோசமாக பாதிக்கப்படலாம் என யுனிசெவ் எச்சரித்துள்ளது. யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் பிஸ்மார்க் சுவாங்ஜின் இதனை தெரிவித்துள்ளார் .

பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளது. நான் இன்று காலை கண்விழித்தபோது முதலில் ஆராய்ந்த விடயம் இலங்கையில் இன்று மின்சார துண்டிப்பு எந்த நேரத்தில் நிகழ்கின்றது என்பதே. ஏனென்றால் நீண்ட நேர மின்துண்டிப்புநீண்ட தூர எரிபொருள் வரிசைகள் காலியான பல்பொருள் அங்காடிகள் அதிகரிக்கும் விலைகள் ஆகியனவே இன்று இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியின் குணாதிசயங்களாக காணப்படுகின்றன.

யுனிசெவ் அமைப்பின் மதிப்பீட்டின் படி நாங்கள் உரையாடிய பத்து குடும்பங்களில் ஏழு குடும்பங்கள் தாங்கள் உணவை குறைத்துக்கொண்டுள்ளதாக எங்களிடம் தெரிவித்தனர். ஆகவே மூன்றுநேரம் உணவுண்டவர்கள் தற்போது இரண்டு அல்லது ஒருநேரம் உணவு உண்கின்றனர் மேலும் அவர்களின் உணவின் தரமும் குறைவடைந்திருக்கவேண்டும்.

நீங்கள் தெரிவித்தது போல உலகில் சிறுவர்கள் மந்தபோசனையால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை ஏழாவது இடத்திலும் பிராந்தியத்தில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மோசமாக பாதிக்கப்படலாம் என நாங்கள் அச்சமடைகின்றோம்.

இந்த நெருக்கடி உண்மையாகவே குடும்பங்களை மிகமோசமாக பாதித்துள்ளது அவர்களால் சாத்தியமான எல்லைகளிற்கு அப்பால் தள்ளியுள்ளதுசிறுவர்களால் வாழ்வின் அடிப்படை விடயங்களை பெற முடியவில்லைஎரிபொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் நாடு உள்ளதே காரணம் மின்துண்டிப்பு மருத்துவமனைகள் போன்ற சிறுவர்கள் நம்பியிருக்கின்ற மிக முக்கியமான சேவைகளை பாதிக்கின்றன.

சுகாதார அமைச்சு 25 அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை எங்களிற்கு வழங்கியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்