இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று! நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளான முதல் இலங்கையர் இலங்கைக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனை ஜனாதிபதி செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி செயலகம் இலங்கை மக்களுக்கு அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

அதன்படி கோரோனோ வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு இலங்கை பொது மக்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ், 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்