இலங்கையில் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் ஆபத்து! வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பு

எதிர்வரும் நாட்களில் ஆபத்தான நிலைமை ஏற்பட்டால் வீட்டில் இருந்தே அலுவலக பணிகளை மேற்கொள்ளும் முறை ஒன்று அறிமுகம் செய்யப்படும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்று அதிகரிப்பினை தடுப்பதற்காக அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாட்டின் பாதுகாப்பிற்காக அரசாங்கத்தினால் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலைமையினால் நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து இலங்கை வந்தவர்களாலே இந்த நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்தாமை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை நீடித்தால் வீட்டில் இருந்தே அலுவலக பணியை மேற்கொள்வதற்கான நடைமுறை ஒன்று உருவாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் நாம்